நமது அடுத்த திட்டமாக, நமது ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் நெகிழி பைகளை (பாலிதீன் பைகள் மட்டும்) சுத்தம் செய்யும் வகையில் “குப்பை பொறுக்கும் திருவிழாவை” முன்னெடுக்கவுள்ளோம். அதற்கான விபரங்கள் அடங்கிய *விளம்பர இதழை* உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

சேகரிக்கப்பட்ட குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படும் இடத்திற்கு அனுப்பிவைக்கப்படும். 

*ஏன் இந்த திட்டம்:* நமது பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து தருமாறு வைக்கப்பட்ட சில கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலும், (நெகிழியை மண்ணை கொண்டு மூடிவிடுவது, எரித்து விடுவது), அவைகளை சரியான முறையில் கையாளப்படாததால், இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

இதற்கு மாற்றாக துணிப்பையை கையிலெடுப்போம். அதை நம்மில் இருந்தே ஆரம்பிப்போம். இதற்கான விழிப்புணர்வு போதிய அளவு இருப்பினும், நடைமுறைப்படுத்த வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். மாறுவோம். மாற்றுவோம்.