நாள் :02.08.2018
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மகிழ்ச்சியான செய்தி..

பொருளூர் ஊராட்சியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து தருமாறு, ஊராட்சி மன்றத்திடம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக கேட்டுக்கொண்டு இருந்தோம். இன்று வரை அதை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். அதன் முதல் கட்டமாக, ஊராட்சியில் அதிகம் குப்பை உள்ள இடங்களை கண்டறிந்து, அதில் ஒரு இடத்தை தூய்மைப்படுத்த, முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அளித்தோம். நமது விடியல் குழு நண்பர்கள் பலரும் உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1. CM cell ல் முதல் கோரிக்கை – சூலை 11, 2018
2. மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை சூலை 16, 2018
3. CM cell ல் இரண்டாம் கோரிக்கை – சூலை 19, 2018

நமது கோரிக்கைக்கு பின்னர் நடந்தது என்ன?

நமது CM Cell முதல் கோரிக்கைக்கு பின், எந்தவிதமான தூய்மைப்பணிகளும் செய்யப்படாமல், பணிகள் செய்யப்பட்டதாக கூறி சூலை 18, 2018 அன்று பதில் கொடுத்தார்கள்.

நாம் அனுப்பிய மாவட்ட ஆட்சியருக்கான கோரிக்கை BDO அவர்களுக்கு அனுப்பட்டதாக பதில் சூலை 17, 2018 அன்று வந்தது. இதை அனுப்பிய நமது குழு நண்பர்களும் கிடைத்திருக்கும்.

நமது CM Cell ன் முதல் கோரிக்கை நிறைவேற்றப்படாததை, நிறைவேற்றியதாக கூறியதை இரண்டாம் கோரிக்கையில் சூலை 18, 2018 அன்று தெளிவாக கூறிவிட்டோம். அதன் பின்னர் தான் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். முடித்தும் விட்டார்கள். உங்களுக்காக அதன் புகைப்படங்கள்.

இவ்வளவு காலம் அங்கே குப்பைகளை விழிப்புணர்வு இல்லாமல் போட்டுக் கொண்டிருந்த மக்கள், குப்பைத் தொட்டியில் போட ஆரம்பித்து விட்டார்கள். குப்பை போடப்பட்ட இடத்தில், மரக்கன்று வைத்து பராமரிக்க நிலத்தின் உரிமையாளரும் ஒப்புதல் அளித்துவிட்டார் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

இது நமக்கு புது உத்வேகத்தையும், கேட்டால் கிடைக்கும் என்ற எண்ணத்தையும் மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளது.இந்த தருணத்தில் பணிகளை செய்து கொடுத்த நமது ஊராட்சிக்கும், அதற்கு உதவிய நமது விடியல் நண்பர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

நம் மாற்றம், நம் கையில்…

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *