• நாள் : 15.09.2018நேற்று வெள்ளிக்கிழமை, நாச்சியப்பகவுண்டன் வலசு அரசு ஆரம்பப் பள்ளிக்கு, நமது குழுவின் சார்பில் விளையாட்டு பொருட்கள் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
  • நமது ஊராட்சிக்கு உட்பட்ட குப்பாயிவலசில் உள்ள மயானம் முற்புதர்கள் அண்டி கிடந்தது. அதன் பொருட்டு சுத்தம் செய்ய கோரி நாம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றியும், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் கேட்டு கொண்டு இருந்தோம். அதன் பொருட்டு நமது ஊரின் மயானத்தை ஆகஸ்ட் 30 அன்று சுத்தம் செய்து தந்து உள்ளார்கள். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இது நடைபெற உதவிய அனைவருக்கும் நமது குழு சார்பாக நன்றிகள்.
  • நமது குழுவின் சார்பாக, வெருவாடிநாயக்கன்வலசு (உப்பிலியவலசு) மற்றும் பொருளூர் அரசு ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு, பள்ளிச் சீருடை ஊர் பெரியவர்களால் வழங்கப்பட்டது
  • கிராமசபையில் சிறப்பாக பங்கு கொண்ட நமது நண்பர்களுக்கு நன்றிகள்.கிராமசபை இந்த முறை சிறப்பாக நடைபெற்றது.11 மணிக்கு தொடங்கிய கிராமசபை 3:30 மணி வரை நடந்து நேரம் போதவில்லை.
  • நாள் :02.08.2018
   மகிழ்ச்சியான செய்தி..பொருளூர் ஊராட்சியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து தருமாறு, ஊராட்சி மன்றத்திடம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக கேட்டுக்கொண்டு இருந்தோம். இன்று வரை அதை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். அதன் முதல் கட்டமாக, ஊராட்சியில் அதிகம் குப்பை உள்ள இடங்களை கண்டறிந்து, அதில் ஒரு இடத்தை தூய்மைப்படுத்த, முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அளித்தோம். நமது விடியல் குழு நண்பர்கள் பலரும் உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.1. CM cell ல் முதல் கோரிக்கை – சூலை 11, 2018
   2. மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை சூலை 16, 2018
   3. CM cell ல் இரண்டாம் கோரிக்கை – சூலை 19, 2018நமது கோரிக்கைக்கு பின்னர் நடந்தது என்ன?நமது CM Cell முதல் கோரிக்கைக்கு பின், எந்தவிதமான தூய்மைப்பணிகளும் செய்யப்படாமல், பணிகள் செய்யப்பட்டதாக கூறி சூலை 18, 2018 அன்று பதில் கொடுத்தார்கள்.நாம் அனுப்பிய மாவட்ட ஆட்சியருக்கான கோரிக்கை BDO அவர்களுக்கு அனுப்பட்டதாக பதில் சூலை 17, 2018 அன்று வந்தது. இதை அனுப்பிய நமது குழு நண்பர்களும் கிடைத்திருக்கும்.நமது CM Cell ன் முதல் கோரிக்கை நிறைவேற்றப்படாததை, நிறைவேற்றியதாக கூறியதை இரண்டாம் கோரிக்கையில் சூலை 18, 2018 அன்று தெளிவாக கூறிவிட்டோம். அதன் பின்னர் தான் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். முடித்தும் விட்டார்கள். உங்களுக்காக அதன் புகைப்படங்கள்.

   இவ்வளவு காலம் அங்கே குப்பைகளை விழிப்புணர்வு இல்லாமல் போட்டுக் கொண்டிருந்த மக்கள், குப்பைத் தொட்டியில் போட ஆரம்பித்து விட்டார்கள். குப்பை போடப்பட்ட இடத்தில், மரக்கன்று வைத்து பராமரிக்க நிலத்தின் உரிமையாளரும் ஒப்புதல் அளித்துவிட்டார் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

   இது நமக்கு புது உத்வேகத்தையும், கேட்டால் கிடைக்கும் என்ற எண்ணத்தையும் மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளது.இந்த தருணத்தில் பணிகளை செய்து கொடுத்த நமது ஊராட்சிக்கும், அதற்கு உதவிய நமது விடியல் நண்பர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • நாள் : 20.07.2018இன்று VN வலசு அரசு ஆரம்பப் பள்ளிக்கு நமது விடியல் குழுவின் சார்பாக, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் விளையாட்டு பொருட்களும், புத்தகங்களும் வழங்கப்பட்டன.
  • மரக்கன்றுகள் வழங்கும் விழா
  • கோடை கால பயிற்சி முகாம்
  • பொருளூர் ஊராட்சி நூலக திறப்பின் வெற்றிக்கதை

நமது பொருளூர் ஊராட்சியில், நூலகம் அமைக்க, பல வருடங்களாக, பல மனுக்களை அனுப்பிய பின்னரும், ஊராட்சியில் போதுமான நிதி இல்லை என்ற ஒரு காரணத்தை முன்வைத்து நூலகம் திறக்கப்படவில்லை.

ஆனால் இடைவிடாத நமது முயற்சியினால், பல தடைகளின் பின்னர், நூலகம் வேண்டும் என்ற கோரிக்கை, சனவரி 26 அன்று நடைபெற்ற      கிராமசபை கூட்டத்தில் பலமாக வைக்கப்பட்டது.

கடைசியில் ஊராட்சி நிர்வாகம், நூலகத்திற்கு ஒரு அறையை ஒதுக்க முடிவு செய்தது.விடியல் குழு நண்பர்களாகிய நாம், நூலகம் அமைய முழுமுதற்கரணமாக இருந்ததில் என்பதில் பெருமை கொள்வோம்.

 

 • நாள்: மாசி 18, 2048 (02.03.2018)இடம்: பொருளூர் உயர்நிலைப்பள்ளி, பொருளூர்

       மாணவர்களுக்கு, கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை (Career Guidance Program) AIM REED அறக்கட்டளை நண்பர் திரு.இராஜீவ் அவர்கள் வழங்கினார்.