• மகிழ்ச்சியான செய்தி: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு தூய்மை அரசுப் பள்ளிகளில் எங்களது பொருளூர் அரசு உயர்நிலைப் பள்ளியும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியுடைகிறோம்.. பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவ கண்மணிகளுக்கும் நமது குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • ***கிராமசபை**அக்டோபர் 2, 2018*பொருளூர் ஊராட்சி***கிராமசபையில் சிறப்பாக பங்கு கொண்ட நமது ஊராட்சி பொதுமக்களுக்கும், விடியல் நண்பர்களுக்கும் நன்றிகள்.

    இந்த முறை கிராமசபை சிறப்பாக நடைபெற்றது.11 மணிக்கு தொடங்கிய கிராமசபை 2:15 மணி வரை நடந்தது. இந்த முறையும் சுமார் 200 க்கும் மேற்பட்ட மக்கள் வந்ததில் மகிழ்ச்சி. என்றும் போல பல பிரச்சனைகள் இருந்தாலும், பஞ்சாயத்து ஊழியர்கள் அவர்களை கேட்டு செய்து தருவதாக கூறியது மகிழ்ச்சி. இனிமேல் தான் நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. இந்த முறை கூட்டம் பலருக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. நமது முயற்சி தொடரும். அடுத்த கிராமசபைக்குள் பல திட்டங்களை நண்பர்கள் செய்யவுள்ளோம்.

    நம் மாற்றம்… நம் கையில்..

  •  நமது குழு இன்று(அக்டோபர் 1, 2018) Play Store ல் “Ullatchi Ungalatchi” என்ற App யை வெளியிட்டுள்ளோம். இதில் முதலாவதாக கிராம சபை, ஊராட்சி நிர்வாகம் குறித்த கேள்வி பதில்கள் அடங்கும். இனி வரும் காலங்களில் மேன்மேலும் தகவல்கள் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கப்படும்.
  • எங்கள் பொருளூர் ஊராட்சியில் அக்டோபர் 2,2018 கிராமசபை தண்டோரா. இன்றைய கிராமங்கள்: பொருளூர், புளியம்பட்டி.. நாளை இன்னும் சில கிராமங்களில்.நீங்களும் உங்கள் பஞ்சாயத்தில் கோரிக்கை வையுங்கள். கண்டிப்பாக நடக்கும்.

எங்கள் பொருளூர் ஊராட்சியில் அக்டோபர் 2,2018 கிராமசபை தண்டோரா. இன்றைய கிராமங்கள்: பொருளூர், புளியம்பட்டி.. நாளை இன்னும் சில கிராமங்களில்.நீங்களும் உங்கள் பஞ்சாயத்தில் கோரிக்கை வையுங்கள். கண்டிப்பாக நடக்கும்.முயற்சி திருவினையாக்கும். நன்றி.#PorulurPanchayatMeeting2018#TeamVidiyal

Posted by விடியல் நண்பர்கள் குழு on Wednesday, September 26, 2018